பேராசிரியர் த. வசந்தாள்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முதுகலை மற்றும் ஆய்வு மாணவராக ஏழு ஆண்டுகள் தமிழ் கற்றேன். தொடர்ந்து 27 ஆண்டுகள் எதிராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினேன்.

பணி நிறைவுக்குப் பிறகும் தமிழ் இலக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறுந்தொகைப் பாடல்களின் ஆழமும் அழகும் என்னை அதன் ஒலி உரை வழங்கும் பணிக்குத் தூண்டியது.

ஏன் குறுந்தொகைக்கு ஒலி உரை?

குறுந்தொகைப் பாடல்கள் என் உள்ளத்தை ஆழமாகக் கவர்ந்தவை. குறுகிய அடிகளில் பெரும் உலகைச் சொல்லும் இப்பாடல்கள், சங்கத் தமிழரின் வாழ்க்கை, பண்பு, காதல், அறிவு, இயற்கை உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

சிறப்பு:குறுந்தொகை வழி தமிழின் தொன்மை

  • சங்க அக நூல்களில் முக்கியமான ஒன்று

  • 205 புலவர்கள் பாடியவை

  • மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கைப் பதிவுகள்

  • ஐவகை நிலங்கள், மக்கள், பண்பாடு, வணிகம், இயற்கை அறிவு

KURUNTHOHAI

Culture